சித்ராபெளர்ணமி விழா சித்ராபொளர்ணமி சித்ரகுப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பெளர்ணமி வரும் நாள் சித்ரா பெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரா பெளர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதுபற்றி இரண்டு புராண கதைகள் கூறப்படுகின்றன.
மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும், அவர்களின் உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த பாவ,புண்ணியத்திற்கேப்ப தண்டனைகளையும் கொடுத்துவந்தார் அவர்.
அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை சந்தித்து தனது பணிகளில் தனக்கு உதவியாக ஒருவரை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சிவபெருமானும் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் கூறி ஒருவரை படைக்க வைத்தார். சித்ராபெளர்ணமியன்று படைக்கப்பட்டு, அன்று பிறந்ததால் அந்தகுமாரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயரிடப்பட்டது என ஒரு கதையில் கூறப்படுகிறது.
மற்றொரு கதை:
ஒரு முறை தனது மனைவியான பார்வதி தேவியை ஆச்சர்யப்பட வைக்க வேண்டும் என்பதற்காக சித்திரம் (ஓவியம்) ஒன்றிற்கு உயிர் கொடுத்தார்.
சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த குமாரன் என்பதால் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். இவரை எமதர்மராஜனுக்கு உதவி செய்ய சிவபெருமான்அனுப்பி வைத்தார் என கூறப்படுகிறது.
எமதர்மராஜனிடமிருக்கும் சித்ரகுப்தன் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து அவரவர் செய்த பாவ,புண்ணியத்திற்கேற்ற பலன்களைஎமதர்மனிடம் கூறி நிர்ணயிக்கிறார் என கூறப்படுகிறது.
சித்ரகுப்தன் கோவில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சித்ரகுப்தனைகருணீயர் சமூகத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலை சோழர்குலத்தைச் சேர்ந்த அரசர் சென்னிவளவன் என்பவர் கட்டினார் என கூறப்படுகிறது.
இந்த கோவிலில் சித்ரகுப்தன் இடது காலை மடித்து, வலதுகாலை ஊன்றிய நிலையில் காணப்படுகிறார். ஒரு கையில் எழுத்தாணியும், ஒரு கையில் ஓலைச்சுவடியும்காணப்படுகிறது.
சித்ராபெளர்ணமி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐஸ்வர்யகலச பூஜை , மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.
இரவு உற்சவர் நான்கு மாடவீதிகளிலும் திரு உலா வருகுகிறார்.
ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவராக கருதப்படுகிறார். இவர் கூறியதன் படிமற்ற கிரகங்களும் சித்ரகுப்பதனுக்கு கட்டுப்பட்டுள்ளளர்எனகூறப்படுகிறது.
ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தடைபட்டவர்களும் சித்ரகுப்தனை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும், திருமணத்திற்கு இருந்த வந்ததடைகளும் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
சித்ரா பெளர்ணமியன்று கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி சித்ரகுப்தனை வழிபட்டால் சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும்:
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,
லேகணீபத்த தாரிணம்
சித்திர ரக்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
இதன் பொருள்:
சிறந்த அறிவும்,ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி, ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும், அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும்,எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம்.
இந்த ஸ்லோகத்தை கூறி சித்தகுப்தரை வழிபடுவது நலம் தரும்.
சித்ரா பொளர்ணமியன்று உப்பில்லாமல் சாப்பிட்டு விரதம் இருப்பதும் நல்லது.