இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்களாகச் செங்காளன் மாநிலக் கலாசார அமைச்சின் சார்பில் திரு.மௌறிச்சியோ மாக்கெத்தி அவர்களும் சென்மார்க்கிறேத்தன் நகரசபை அதிபர் திரு. பௌல் கெரோசா அவர்களும் லுற்சேர்ன் பல்கலைக்கழகக் கலாசாரத்துறை ஆய்வாளர் திருமதி றெவேலா எயுல்பேர்க் (M.A) அவர்களும் றைந்தால் கலாசாரத்துறையின் சார்பில் திருமதி. அவ்வோல்டர் தெரேசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாலை 6.30 மணிக்கு வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் சென்மார்க்கிறேத்தன் ஆலயத்தின் தோற்றம் தோற்றத்துக்குரிய நோக்கம் என்பன பற்றிய விளக்கம் அறிக்கை வடிவில் வாசிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலயகுரு வா.சிறீதரக்குருக்கள் அவர்கள்; தீபாராதனையுடன் பூசையை ஆரம்பிக்க;
பூசைக்குரிய விளக்கமும் ஆலயத்தின் அமைப்பு பரிவார மூர்த்திகள் சைவசமயப் பண்பாடு பூசைமுறை கடவுளர் பற்றியும் சைவநெறிக் கூடத்தின் சார்பில் வருகை தந்திருந்த திரு. கீர்த்தி அவர்களால் டொச் மொழியில் மிகவும் சிறந்த முறையில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலதிகமான தனிநபர் விளக்கங்கள் முரளி சசி (சைவநெறிக்கூடம்) ஊடகவியலாளர்களான சண் தவராஜா கனகரவி ஆகியோரால் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலதி கலையக மாணவிகளால் நடனமும் வயலின் இசையும் வழங்கப்பட்டதையடுத்து வருகை தந்திருந்த அனைவருக்கும் இரவுநேர உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்குக் கிறிஸ்தவ இஸ்லாமிய பௌத்த சமயங்களிலிருந்தும் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு வருகை தந்திருந்த அனைத்து மக்களும் நிகழ்வைப் பாராட்டிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.
|